ஆசை என்பது இலக்கல்ல…

கட்டுரை

- Advertisement -

மனிதருக்கு ஆசை என்பதற்கு வரையறை இல்லை அது வானளாவிய குறிக்கோள், இலக்கை அடையும் வரை ஓயுதல் செய்யோம் என்று மேலைநாட்டு தத்துவத்தை இங்கே தாறுமாறாக அமுலாக்கம் செய்ய நினைப்போர் ஆற்றின் சுழலில் சிக்கியதைப் போன்ற நிலையில் வித்தகம் பேசுவர், அவர் என்றும் வீணரே.

ஆசை என்பதே காற்றடைத்த நெகிழியே உண்மை குத்தூசியாகும் வரை அது புரிவதில்லையே.

வாழ்க்கைப் பயணத்தில் மனிதர்கள் யாசிப்போரே. 

இங்கு சுவாசக் காற்றே இரவல் தானே. இலவசம் தானே.

மனிதர் எவருமே  கொடுக்கப் பட்டவைகளில் என்றும் முழுமை பெறுவதில்லை என்பதே வாழ்ந்தோர் விட்டுச் செல்லும் சாட்சி. 

அந்தக் காட்சி ஒவ்வொருவருக்கும் தெளிவாகத் தெரிந்தால் வாழ்க்கைப் பயணம் மூட்டை முடுச்சுகள் இன்றி பயணிப்பது எளிதே.

ஆனால் ஏதோ ஒன்றைத் தேடும் மனிதன், ஏதோ ஒன்றை நாடி, தேடாத ஒன்றை பெற்று வாழ்க்கையின் நோக்கம்வென்றதாக மார்தட்டும் மடமையை என்னவென்று சொல்வது!!

மண்ணில் எவருமே தேடாத ஒன்றை ஒருவர் தேடுகிறார் என்றால், அந்தத்

தேடல் மனித சமுதாயத்தில் மகத்தானதென கொண்டாப்படலாம்.

மண்ணில் எதையும் தெரிந்துகொள்வதை விட புரிந்து கொள்ளுதல் என்றும் இன்றியமையாதது.

ஏன்?

நாம் நம் கண்களைக் கொண்டு பிறருடைய  திரு முகங்களை எல்லாம் பார்க்கலாம். ஆனால் நம்முடைய முகத்தைப் பார்க்க இயலுமா?

இப்படியும் யோசிப்போமே!

முகம் பார்க்கும் கண்ணாடியைப்  பார்த்திடாத ஒரு குழந்தையைக் கவனிப்போம். 

தன்னைச் சுற்றி உள்ளவற்றை அக்குழந்தையால் காண இயலுகிறது. 

ஆனால் தன்னைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதற்கு எழவில்லை. 

கண்ணாடியில் காணும் உருவம் தன்னுடையது என்று மற்றவர்களுக்குச் சொல்வதில்லை. சொல்லத் தெரியாது என்பது இயற்கை தான். 

மண்ணிற் பிறந்தோர் எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலேயே பெருங்கவனம் செலுத்துவர். 

இது கலியின் வலியோ புரியவில்லை!

Corporate உலகமாகிவிட்டதால் இங்கே எதுவுவே விளம்பரம் தேடி வாழ்வது தவிர்க்க இயலாமல் உதயமாகிவிடுகிறது. 

ஒரு brand ambassador போல் எந்த ஒரு செயலுக்கும் தன்னை ஒவ்வொருவருமே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.  

அதுதானே ஆணவம் திரளவும் புரளவும் வாழ்க்கைக் கோலத்தின் முதற்புள்ளி ஆகிறது. ஆனால் அதுவே இறுதிப் புள்ளி என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை.

ஆனால் 

அந்தப் புள்ளி  குழந்தைகளிடம் உருவாகவில்லை.

ஆணவம் ஆசை மறுவுகள் இல்லாத அந்த நிலையே மனிதரைப் புனிதரென மாற்றும் என்று உலக மறைகளெல்லாம் சொல்கின்றன.

புரிந்து வாழ்ந்தால் நம்மையும் மனித இனத்தில் அது சேர்த்திடுமே!!

குழந்தை போல் கள்ளம் கபடின்றியும்

மறை கூறும் விதம் நாளும் வாழுவதும் அறத்துடன் தரமாய் வாழ மண்ணிலே மனிதரும் இறைவனாகலாம்.

அக்காரக்கனி
அக்காரக்கனி
தமிழ் சொல்லோடு மலர்ந்து கிடப்பது அன்றாடப் பணி.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -