சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.
அவன் அம்மா தன் பையன் பெயரில் கட்டாயம் ‘ஷ’னா வர வேண்டும் என்று அவன் பிறந்து மூன்று மாதங்களுக்குப் பல பெயர்களைச் சலித்தெடுத்து, “அஷோக்” என்று வைத்தாள். தன் சொந்தத்தில் யாருக்கும் அப்படியான ஒரு பெயர் இல்லை என்று பல காலம் பெருமைப்பட்டுக் கொண்டாள்.
ஒரு புலிக் கலைஞனின் கம்பீர முகமூடிக்குப் பின்னால் நிரந்தரமாய் குடிகொண்டிருக்கும் அவனது வறுமையையும் இயலாமையையும் நிதர்சனம் குறையாமல் வெளிக்கொணரும் ஒரு மகத்தான படைப்பு, அசோகமித்ரனின் “புலிக்கலைஞன்”.
நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவர் அம்பை. தனது அதிரடியான எழுத்தால் பெண்ணிய எழுத்தில் பெரிய பாய்ச்சல் செய்தவர். பெண்களின் நிலை அதிகம் முன்னேறிவிட்ட இந்தக் காலகட்டத்திலும் பலர் பேசத் தயங்கும் விஷயங்களை வெகு காலம் முன்பே தன் படைப்பில் அவர் பேசியிருக்கிறார் என்பது பிரம்மிக்க வைக்கிறது.
தற்காலத் தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை திரு.அ.முத்துலிங்கம். புலம்பெயர் மக்களின் நெருக்கடிகளை, கனவுகளைத் தொடர்ந்து தனது எழுத்தில் பதிவு செய்து வருபவர். “மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள்” என்ற இந்தக் கதையிலும் ஒரு புலம்பெயர்ந்த பரிசாரகி வருகிறாள்.
சிறு வயதில் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி போன்ற கதைகள் அதிகம் கேட்டிருப்போம். பாட்டி, தாத்தா, பக்கத்து வீட்டு அக்கா என யாராவது ஒருவர் ரூபத்தில் கதைசொல்லிகள் குழந்தைகளுக்கு கிடைத்து விடுவார்கள்.
மதுரை அரசு மருத்துவமனைக்கு தன் உறவினர் ஒருவரைப் பார்க்கச் சென்ற சுஜாதா, அங்கே மருத்துவமனையின் நிலை கண்டு, அந்த பாதிப்பில் எழுதிய கதைதான் " நகரம்". இன்றளவும் அவரின் சிறுகதைகளில் ஆகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. சிறுகதை வெளிவந்து சில நாட்களில்,மதுரை அரசு மருத்துவமனையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதை அறியும் போது, கதையின் வீச்சு எத்தகையது என்பது புரியும்.
தன்னைப் பற்றி எல்லோரிடமும் பொய்யான தகவலைப் பரப்பும் நெருங்கிய நண்பன் தந்த மனக் கசப்பைப் போக்க ஒரு ஹோட்டலுக்குள் நுழைகிறான் அவன். வாங்கிய காபியின் கசப்பும் சேர்ந்து கொள்ள நண்பனுடனான தனது உறவை எண்ணிப் பார்க்கிறான். தற்செயலாக அங்கே மாட்டப்பட்டிருக்கும் காந்தி படத்தின் மீது அவன் கவனம் விழுகிறது. அவன் சிந்தனை உடனே காந்தி பற்றி